ஆர்ப்பாட்டமின்றி வசூலைக் குவிக்கும் கமலின் பாபநாசம்!


ஆர்ப்பாட்டமின்றி வசூலைக் குவிக்கும் கமலின் பாபநாசம்!

மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த ‘த்ரிஷ்யம்’ தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ‘பாபநாசம்’ என்ற பெயரில் ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் கமல்ஹாசனுடன் கெளதமி, சார்லி, கலாபவன் மணி, டெல்லி கணேஷ், பேபி எஸ்தர், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.

தெலுங்கு, கன்னடம் என ரீமேக் செய்யப்பட்டு அனைத்திலும் வெற்றிப்பெற்ற பெற்ற இப்படம் தமிழிலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கமல் என்ற ஒரு பெரிய நடிகரின் படம் எந்த ஒரு ஆர்ப்பாட்டமுமின்றி வெளியானது. இல்லதரசிகள் மற்றும் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ 8 கோடி வரை வசூலித்து சாதனைப் புரிந்துள்ளது. உலகெங்கும் வெளியான மூன்று நாட்களில் மட்டும் இதுவரை 28 கோடி ரூபாய் வரை வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 18 கோடியை ‘பாபநாசம்’ வசூலித்துள்ளது. இனிவரும் நாட்களில் இதன் வசூல் எகிறும் என திரைப்பட விமர்சன வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

உத்தமவில்லனால் உறங்கிகிடந்த கமல் ரசிகர்கள் ‘பாபநாசம்’ வெற்றியால் உற்சாகமடைந்துள்ளனர்.