2015 வருடத்தின் ப்ளாக்பஸ்டர் படம் ‘காஞ்சனா-2’


2015 வருடத்தின் ப்ளாக்பஸ்டர் படம் ‘காஞ்சனா-2’

‘முனி’, ‘காஞ்சனா’ வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், ‘காஞ்சனா-2′ கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா, ஸ்ரீமன், மயில்சாமி, மனோபாலா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் லாரன்ஸின் பேயாட்டம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

குழந்தைகள் முதல் அனைவரையும் கவர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறாள் காஞ்சனா. ஆனால் படத்தின் பட்ஜெட் ரூ. 20 கோடியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்துவிட்ட போதிலும் தமிழகத்தின் சில அரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வசூல் நிலவரம் குறித்து பாக்ஸ் ஆபிஸ் வல்லுனர் த்ரிநாத் கூறியதாவது… “இந்த 2015 வருடத்தில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் முதல் ப்ளாக்பஸ்டர் படமாக ‘காஞ்சனா 2′ உருவாகியுள்ளது. தியேட்டர் டிக்கெட் விற்பனையில் மட்டும் ரூ.110 கோடியை தாண்டியுள்ளது” என்றார்.

தற்போது வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்காக லாரன்ஸ் ஒரு படத்தை இயக்கி நடிக்கவிருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.