ஆர்யா கேப்டன்ஷிப்பில் முதல் தோல்வி!!


ஆர்யா கேப்டன்ஷிப்பில் முதல் தோல்வி!!

சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டி கடந்த ஏழு வருடங்களாக நடைபெற்று வருகிறது.

இவ்வருடத்திற்கான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இம்முறை எட்டு அணிகள் பங்கேற்று மோதி வருகின்றன.

நேற்றைய ஆட்டத்தில் தமிழக சினிமா நட்சத்திரங்களும், கர்நாடகா சினிமா நட்சத்திரங்களும் போட்டியிட்டனர்.

ஆர்யா தலைமையில் சென்னை ரைனோஸ் அணியிம் சுதீப் தலைமையில் கர்நாடகா புல்டோசர் அணியும் மோதியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங் செய்தது.

20 ஓவர் முடிவில் 211 ரன்கள் குவித்தது கர்நாடகா புல்டோசர் அணி. 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு சென்னை ரைனோஸ் அணி களமிறங்கியது.

40 ரன்கள் எடுக்கும் முன்னரே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது சென்னை ரைனோஸ் அணி.

இறுதியில் 128 ரன்களை மட்டுமே எடுத்த சென்னை ரைனோஸ் அணி, 83 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா அணியிடம் தோல்வியுற்றது.

நடிகர் கலையரசன் அதிக ரன்கள் எடுத்திருந்தார். நடிகர் பரத் கடைசி வரை பேட்டிங் செய்ய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.