கார்த்தி, துல்கர் நடிக்கும் புதிய படம் ‘அக்னி நட்சத்திரம்-2’


கார்த்தி, துல்கர் நடிக்கும் புதிய படம் ‘அக்னி நட்சத்திரம்-2’

இந்த வருடம் வெளியான சிறந்த படங்களில் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படமும் ஒன்று. படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் வெகுவாக கவர்ந்தது. எனவே மணிரத்னத்தின் அடுத்த படம் மீது பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனவே, மணிரத்னமும் தன் படத்திற்கான பணிகளை துவங்கினார். இப்புதிய படத்தில் நடிக்க கார்த்தி, துல்கர் சல்மான் மற்றும் கீர்த்திசுரேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தன் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பாக மணிரத்னம் தயாரிக்கவிருக்கிறார். வருகிற டிசம்பர் மாதம் இதன் படப்பிடிப்பி துவங்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்தை பற்றிய ஒரு தகவல்கள் வந்துள்ளன. கடந்த 1988ஆம் ஆண்டு பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் ‘அக்னி நட்சத்திரம்’. தற்போது இயக்கவுள்ள இப்படம் அக்னி நட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கார்த்தி-துல்கர்சல்மான் இருவரும் பிரபு-கார்த்திக் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் இவையெல்லாம் நம்பத்தகுந்த தகவல்களா? என்பது விரைவில் தெரியவரும்.