மணிரத்னம்-கார்த்தி படம் தாமதமாக ‘காஷ்மோரா’ காரணமா.?


மணிரத்னம்-கார்த்தி படம் தாமதமாக ‘காஷ்மோரா’ காரணமா.?

தோழா படத்தை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காஷ்மோரா’.

கோகுல் இயக்கி வரும் இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் நீண்ட நாட்களாக இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதனைத் தொடந்து மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கிறார் கார்த்தி. ஆனால் வெகுநாட்களாக இப்படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் எழுந்தாலும் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்து வருகிறது.

இதுகுறித்து கார்த்தி தரப்பில் கூறியதாவது…

“ஜூன் மாதத்திற்குள் ‘காஷ்மோரா’ முழுவதும் முடிவடைந்துவிடும். அதன்பின்னர் மணிரத்னம் படத்தில் நடிப்பார்.

இதனையடுத்து, ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, இதையும் ‘காஷ்மோரா’ தயாரிப்பாளர் தயாரிப்பார் என்று தெரிவித்தனர்.