பர்த்டே ட்ரீட்… கார்த்திக்கு கேக் ஊட்டிய நயன்தாரா..!


பர்த்டே ட்ரீட்… கார்த்திக்கு கேக் ஊட்டிய நயன்தாரா..!

நடிகர் கார்த்தி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு, டுவிட்டர் தளத்தில் இணைந்துள்ளார்.

புதிய உலகில், புதிய அனுபவத்துக்காக அடியெடுத்து வைத்துள்ளேன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி என்று அவர் தன்னுடைய முதல் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

எனவே அவருக்கு ரசிகர்களும், திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அவர் தற்போது கோகுல் இயக்கும் காஷ்மோரா படப்பிடிப்பில் இருக்கிறார். அங்கு தன் பிறந்த நாளை கேட் வெட்டி கொண்டாடி வருகிறார்.

அப்போது அருகில் இருந்த நயன்தாராவுக்கு அவர் கேக் கொடுத்துள்ளார். நயன்தாராவும் கார்த்திக்கு கேக் ஊட்டி மகிழ்ந்துள்ளார்.

கார்த்தி ரசிகர்கள் தரப்பில் நடைபெறும் நிகழ்வுகள்…

காலை 11:00 மணிக்கு அரசு மருத்துவமனைக்கு 200 போர்வை வழங்குதல் நிகழ்வு.

காலை 11:30 மணிக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் இரத்ததானம்..

பகல் 12:30 மணிக்கு வால்டாக்ஸ் ரோடு ஆதரவற்ற பிள்ளைகளுக்கு “ அன்னதானம்”.

பகல் 1:00 மணிக்கு திருவான்மியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் “ அன்னதானம் “.

பகல் 1:00 மணிக்கு பாடி கோவிலில் அன்னதானம்.

மாலை 3:00 மணிக்கு ராயபேட்டை ஓட்டேரி ஆகிய இடங்களில் “ தண்ணீர் பந்தல் “ மற்றும் பெயர் பலகை திறப்பு விழா.