கமல்ஹாசன், சூர்யா வழியில் ‘தோழா’ கார்த்தி..!


கமல்ஹாசன், சூர்யா வழியில் ‘தோழா’ கார்த்தி..!

மெட்ராஸ், கொம்பன் என இரண்டு வெற்றிகளை கொடுத்து ஒரு வருட இடைவெளிக்கு பின்னர் தோழா என்ற படத்தை கொடுத்தார் கார்த்தி.

ஒரு வித்தியாசமான உணர்வுபூர்வமான படம் என்ற எதிர்பார்ப்புடன் வந்த இப்படம் கார்த்திக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது.

இவருக்கு மட்டுமில்லாமல், இவரின் ராசியான ஜோடியான தமன்னாவுக்கும் இவரது காம்பினேஷனில் இது ஹாட்ரிக் வெற்றிதான்.

இதுநாள் வரை கார்த்தியின் தமிழ் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது தோழா மூலம் நேரிடையாகவே தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். படமும் ஆந்திர ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கு ஊடகங்களும் நாகார்ஜுனா அளவுக்கு கார்த்தியின் புகழ் பாடி வருகின்றன.

தமிழ் நடிகர்களில் கமல்ஹாசன், சூர்யாவுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது கார்த்தியும் இதில் இணைந்து விட்டார் என்றே கூறலாம்.