சூர்யாவை தொடர்ந்து கார்த்தியும் பேயாக மிரட்ட வருகிறார்.


சூர்யாவை தொடர்ந்து கார்த்தியும் பேயாக மிரட்ட வருகிறார்.

கருப்பு வெள்ளை படத்திலிருந்து ஈஸ்ட்மேன் கலர், 3டி, மோசன் கேப்சரிங் போன்ற அனைத்து விதமான டிரெண்டுக்கு ஏற்ப தமிழ் சினிமா தன்னை மாற்றிக்கொள்ளும்.  இந்நிலையில் தமிழ் சினிமாவின் இன்றைய ட்ரெண்ட் என்ன? என்று கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும். அது பேய் படங்கள்தான்.

‘டார்லிங்’, ‘அரண்மனை’, ‘காஞ்சனா-2’, ‘டிமான்ட்டி காலனி’ போன்ற பேய் வெற்றி படங்களை தொடர்ந்து சூர்யாவும் ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்தில் பேயாக நடித்து அசத்தினார்.

இந்நிலையில் ‘மெட்ராஸ்’, ‘கொம்பன்’ படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் ‘காஷ்மோரா’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இவருக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகிய இருவரும் நடிக்கின்றனர். கார்த்தியின் தந்தையாக விவேக் நடிக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் கார்த்தி இதுவரை ஏற்றிடாத பேய் வேடத்தில் நடித்து வருகிறார். இதன்மூலம் மூன்றாவது வெற்றியை கொடுத்து ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கிறார் கார்த்தி.

இனி எந்தெந்த ஹீரோஸ் பேய் முகம் காட்டப்போறாங்களோ..?