கார்த்தி நடிப்பில் ரீமேக் ஆகும் சூப்பர்ஹிட் மலையாள படம்!


கார்த்தி நடிப்பில் ரீமேக் ஆகும் சூப்பர்ஹிட் மலையாள படம்!

இனி அக்மார்க் ஒரிஜினல் தமிழ் படங்கள் எப்போது வெளியாகும் என்ற நிலைக்கு வந்துவிட்டது தமிழ் சினிமா. மாற்று மொழி படங்களும் ரீமேக் படங்களும் தமிழ் சினிமாவில் களை கட்டி வருகிறது. கூடவே நன்றாக கல்லாவும் கட்டி வருகிறது. அதுவும் மலையாள படங்களின் ரீமேக் உரிமைக்கு தமிழகத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது.

மலையாளத்தில் ‘த்ரிஷ்யம்’ வெற்றிப்பெற்று தமிழில் ‘பாபநாசம்’ ஆனது. மேலும் பிரேமம், பாஸ்கர் தி ராஸ்கல் ஆகிய மலையாள படங்களுக்கும் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த வரிசையில் ‘என்னு நிண்டே மொய்தீன்’ படமும் இணைந்துள்ளது.

பிருத்விராஜ், ‘மரியான்’ புகழ் பார்வதி ஆகியோர் ஜோடியாக நடித்த இப்படத்தை விமல் இயக்கியிருந்தார். 1960ம் ஆண்டு வாழ்ந்த நிஜக்காதலர்கள் மொய்தீன் மற்றும் காஞ்சனா மாலா இருவரின் காதலை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியிருந்தனர். ‘பிரேம்ம்’ படத்தை தொடர்ந்து இந்த காதல் காவியமும் வசூலிலும், விமர்சனத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் ரீமேக் உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது. இதில் கார்த்தி நடிக்கவிருப்பதாக உறுதியான தகவல்கள் வந்துள்ளன. எனவே இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் ரசிகர்களை வந்தடையும் எனத் தெரிகிறது.