கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் பர்த்டே கிப்ட்.. அட்லியுடன் இணைகிறார்..!


கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் பர்த்டே கிப்ட்.. அட்லியுடன் இணைகிறார்..!

கார்த்தி நடிக்கத் துவங்கிய இந்த ஒன்பது வருடங்களில் 12 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

பருத்தி வீரனில் தொடங்கிய இப்பயணத்தில் அதிரடியாய் வெற்றிகளை குவிக்க துவங்கினார்.

இந்த குறுகிய காலத்தில் மாறுபட்ட பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், தன் ரசிகர்களுக்காக ட்விட்டரில் இணைந்துள்ளார்.

மேலும் தன் பிறந்தநாள் பரிசாக மற்றொரு இனிப்பான செய்தியையும் ரசிகர்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ராஜா ராணி மற்றும் தெறி படங்களை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் கார்த்தி நடிப்பார் என தகவல்கள் வந்துள்ளன.

ஏஜிஎஸ் பிலிம்ஸ் கல்பாத்தி அகோரம் நிறுவனத்தினர் இப்படத்தை தயாரிக்கிறார்களாம்.

தெலுங்கு ரசிகர்களிடையும் கார்த்திக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், இரண்டு மொழியில் இப்படத்தை உருவாக்க இருக்கிறார்களாம்.

இதுவரை இல்லாத அளவிற்கு இப்படத்தில் கார்த்திக்கு நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது.

எனவே, அதற்கான ஆலோசனையில் அட்லி ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.