‘சூர்யாவிடம் கற்றுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான்…’ கார்த்தி.!


‘சூர்யாவிடம் கற்றுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான்…’ கார்த்தி.!

‘கொம்பன்’ படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள படம் ‘தோழா’. வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தியுடன் நாகர்ஜுனா மற்றும் தமன்னா நடித்துள்ளனர். அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அண்மையில் கல்லூரி விழாவில் ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார் கார்த்தி.
அப்போது மாணவர்கள் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர்.

அதில் மாணவர் ஒருவர்… “உங்கள் அப்பா, அண்ணன் ஆகியோரிடம் நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்? எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த கார்த்தி, ‘அப்பாவிடம் ஒழுக்கம், விடாமுயற்சி, ஆகியவற்றை கற்றுக் கொண்டேன்.

அண்ணன் சூர்யாவிடம் நான் கற்றுக்கொண்டது ஒன்றுதான். அது, உழைப்பு உழைப்பு உழைப்பு இது ஒன்று மட்டும்தான்’ என கார்த்தி கூறினார்.