‘கமலுடன் இணைய பெரிய திட்டம் உள்ளது..’ – கார்த்தி ஹாப்பி…!


‘கமலுடன் இணைய பெரிய திட்டம் உள்ளது..’ – கார்த்தி ஹாப்பி…!

நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்றது. அதன் வெற்றியை ஒட்டி இன்று நடந்த சந்திப்பில் கார்த்தி பேசினார்.

“நடிகர் சங்க கடன் ரூ. 2 கோடியை அடைத்து விட்டோம். அப்படியே வைத்திருந்தால் வட்டி அதிகமாகி இருக்கும். இப்போது அடைத்து விட்டதால் மகிழ்ச்சியாக உள்ளது. அதன் வட்டியை ஐசரி கணேஷ் ஏற்றுக் கொண்டார்.

முன்பு பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்களால் நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டது. இன்று அதன் மூலம் சிறு சிறு நடிகர்கள் கூட பயன்பெறுகிறார்கள்.

நடிகர் சங்க கட்டிட பணிகளை இப்போது ஆரம்பிக்க மாட்டோம். அதற்கான வரைப்பட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் கோடிக் கணக்கில் பணம் தேவைப்படுவதால், அது கிடைத்த பிறகு அதற்கான வேலைகளை தொடங்குவோம்.

கமல் சார் நினைத்தால் அவரது புதிய படத்தின் படப்பிடிப்பை எங்கு வேண்டுமானாலும்தொடங்கலாம். ஆனால் அவர் நடிகர் சங்க நிலத்தில் வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்குகிறார்.

மேலும் என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். மேலும் அவரும் நிதியை திரட்ட ஒரு திட்டம் வைத்துள்ளதாக கூறியிருக்கிறார். எனவே அவருடன் அதில் இணைந்து நிதி திரட்டுவோம்” என்றார்.