‘தோழா’ கார்த்தியுடன் இணையும் ‘போக்கிரி’ பிரபு தேவா..!


‘தோழா’ கார்த்தியுடன் இணையும் ‘போக்கிரி’ பிரபு தேவா..!

மெட்ராஸ், கொம்பன், தோழா என மூன்று வெற்றிக்கனிகளை சுவைத்த குஷியுடன் வலம் வருகிறார் கார்த்தி.

தற்போது நயன்தாராவுடன் ‘காஷ்மோரா’ படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, மணிரத்னம் இயக்கும் படத்தில் சாய் பல்லவியுடன் நடிக்கிறார்.

இவற்றையெல்லாம் முடித்துவிட்டு, பிரபுதேவா இயக்கும் ஒரு ஆக்ஷன் படத்தில் கார்த்தி நடிக்கவிருக்கிறார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் நடித்த போக்கிரி படத்திற்கு பிறகு தமிழில் பெரிய வெற்றியை பிரபு தேவா கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.