விஜய் சேதுபதி கொடுத்ததை கார்த்தி கொடுப்பாரா..?


விஜய் சேதுபதி கொடுத்ததை கார்த்தி கொடுப்பாரா..?

கார்த்தி தனது முதல் படத்திலேயே பருத்தி வீரன் நாயகனாக களம் இறங்கினார்.

விஜய் சேதுபதியோ குறும்படங்களை தொடர்ந்து மெல்ல மெல்ல நாயகனாக உயர்ந்தார்.

இருவரும் தங்கள் ஆரம்ப காலங்களில் தொடர் வெற்றிகளை கொடுத்து வந்தனர். ஆனால் அதன் பின்னர் இருவரும் தோல்வி படங்களையே கொடுத்தனர்.

இந்நிலையில் கடந்தாண்டில் நானும் ரெடிளதான், சேதுபதி படங்களை கொடுத்த விஜய் சேதுபதி, இவ்வருடம் காதலும் கடந்து போகும் என்ற வெற்றிப் படத்தை கொடுத்து ஹாட்ரிக் அடித்து விட்டார்.

அதுபோல் மெட்ராஸ், கொம்பன் என் இரு வெற்றிப்படங்களை கொடுத்த கார்த்தி, அடுத்த வாரம் தோழா என்ற படத்தை கொடுக்கவிருக்கிறார்.

விஜய்சேதுபதியைப் போல் ஹாட்ரிக் வெற்றியை கார்த்தி கொடுப்பாரா..? என்பதை அடுத்த வாரம் தெரிந்துக் கொள்வோம்.