நயன்தாராவுடன் நடிக்க கெட்டப்பை மாற்றிய கார்த்தி.!


நயன்தாராவுடன் நடிக்க கெட்டப்பை மாற்றிய கார்த்தி.!

தன் முதல் படமான பருத்தி வீரனில் தன் வெற்றிக் கணக்கை தொடங்கினாலும், இடையில் சில தோல்வி படங்களால் துவண்டு போனார்.

ஆனால் தற்போது மெட்ராஸ், கொம்பன், தோழா என தொடர் ஹாட்ரிக் படங்களை கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கோகுல் இயக்கும் காஷ்மோரா படத்திற்காக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனீஷா யாதவ், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட நான்கு நாயகிகளுடன் நடித்து வருகிறார்.

முக்கிய வேடத்தில் விவேக் நடிக்க, இருவேடம் ஏற்றுள்ளார் கார்த்தி.

இப்படத்தின் கதை இரண்டு காலக்கட்டத்தில் பயணிக்கும் ஒரு பீரியட் டைப் கதையாம். இதில் ஒரு வேடத்தில் மொட்டைத் தலையுடன் நடித்துள்ளார். இதற்காகத்தான் சமீபகாலமாக கார்த்தி தலையில் தொப்பியுடன் காணப்படுகிறார்.

இந்த மொட்டை கார்த்திக்கு ஜோடியாகத்தான் நயன்தாரா நடிக்கிறார். இது பீரியட் படம் என்றாலும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.