‘இறைவி’யில் ஒளிந்து கிடக்கும் மர்மங்கள்…!


‘இறைவி’யில் ஒளிந்து கிடக்கும் மர்மங்கள்…!

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களில் வெற்றியால் கார்த்திக் சுப்புராஜின் படங்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகர்களுடன் இவர் அமைத்துள்ள மாபெரும் கூட்டணியான ‘இறைவி’ படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா, கருணாகரன், அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவ்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சிவி குமார் தயாரித்துள்ளார்.

ஓரிரு தினங்களுக்கு முன், படத்தின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டு, பட டீசரை ஜனவரி 8ஆம் தேதி வெளியிட போவதாக கார்த்திக் சுப்புராஜ் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் சில woMENகளின் கதை எனவும் குறிப்பிட்டுள்ளார். படத்தின் டைட்டில் லுக்கை வித்தியாசமான முறையில் வடிவமைத்துள்ளனர். எனவே இறைவி படத்தில் சில வாழ்வியல் மர்மங்கள் நிறைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.