புதிய கூட்டணி… உதயநிதியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்..!


புதிய கூட்டணி… உதயநிதியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்..!

தயாரிப்பாளரான உதயநிதி, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை தவிர இவர் நடித்த மற்ற படங்கள் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

எனவே, முதன்முறையாக இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் ஒரு படத்தில் நடித்துவருகிறார் உதயநிதி. சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘ஒரு பக்க கதை’ பட நாயகி மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, ஜிகர்தண்டா மற்றும் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள இறைவி ஆகிய படங்களின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி.

ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது.