சிம்பு மனதில் தவறான எண்ணம் தோன்றியதே தவறு- நடிகர் கார்த்திக்


சிம்பு மனதில் தவறான எண்ணம் தோன்றியதே தவறு- நடிகர் கார்த்திக்

“பீப்”பாடல் பற்றி கருத்து தெரிவித்த கங்கை அமரன் இளையராஜாவுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

இதற்கு கங்கை அமரனின் மகனும் பிரபல இயக்குனருமான வெங்கட் பிரபுவிடம் சிம்பு வருத்தம் தெரிவித்திருந்தார். இதனையறிந்த கங்கை அமரன் கூறியதாவது.. “சிம்புவும் என் பிள்ளைதான். அவரைத் திட்ட எனக்கு உரிமையில்லையா?” என்று கேட்டுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான நடிகர் கார்த்திக் இப்பாடல் குறித்து கூறியதாவது…

“ஒரு கோயிலை போல சினிமாவை நேசிக்கிறேன். எல்லாருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதால் அதை தவறாக பயன்படுத்தக்கூடாது.

சிம்புவின் ‘பீப்’ பாடலை முழுவதுமாக கேட்க முடியவில்லை. சிம்பு நல்ல பையன்தான். அவருடைய தந்தை டி.ராஜேந்தரும் எனக்கு நல்ல நண்பர்தான்.

சிம்பு அந்த பாடலை வெளியிடவில்லை என்றாலும் பிரபலமான ஒருவர் மனதில் இதுபோன்ற தவறான எண்ணங்கள் இருக்கக் கூடாது” என்றார்.