கார்த்தி பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் விருந்து..!


கார்த்தி பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் விருந்து..!

மெட்ராஸ், கொம்பன், தோழா ஆகிய 3 படங்களின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ” காஷ்மோரா”.

கோகுல் இயக்கி வரும் இப்படத்தில், நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனீஷா யாதவ், விவேக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் மொட்டை தலையுடன் கார்த்தி வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையின் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளது. இதை கார்த்தியின் பிறந்த நாளான மே 25ம் தேதி வெளியிடவுள்ளனர்.

எனவே கார்த்தியின் பிறந்தநாளுடன் பர்ஸ்ட் லுக் கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.