தங்கையாக நடித்த ஓவியாவே இன்று காதலியாக நடிக்கிறார்!


தங்கையாக நடித்த ஓவியாவே இன்று காதலியாக நடிக்கிறார்!

‘களவாணி’ படத்தில் அறிமுகமாகி இளைஞர்களின் இதயங்களை களவாடி சென்றவர் நடிகை ஓவியா. இப்படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அதன்பின்னர் சரியான வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. இதனால் ‘கலகலப்பு’, ‘யாமிருக்க பயமே’ உள்ளிட்ட படங்களில் கிளாமர் வேடங்களிலும் நடித்துப் பார்த்தார்.

இந்நிலையில் அவ்னி சினி மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் சுந்தர்.சி தயாரிக்கும் படமான ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பாஸ்கர் இயக்கும் இப்படத்தில் வைபவ் மற்றும் அட்டகத்தி ஐஸ்வர்யா ஒரு ஜோடியாகவும் மற்றொரு ஜோடியாக கருணாகரன் மற்றும் ஓவியா நடிக்கின்றனர். ‘யாமிருக்கே பயமே’ படத்தில் கருணாகரன், ஓவியா இருவரும் அண்ணன் தங்கையாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி.கணேஷ் நடிக்கிறார். பானு முருகன் ஒளிப்பதிவு செய்ய சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது…. “நாம் பேசும் போனில் ஒரு பேய் ஒளிந்து கொள்கிறது. எனவே அந்த போனை பயன்படுத்துகிறவர்களை பேய்கள் பயமுறுத்துவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.