முதன்முறையாக அஜித் படத்தில் சிவகார்த்திகேயனின் ப்ரெண்ட்..!


முதன்முறையாக அஜித் படத்தில் சிவகார்த்திகேயனின் ப்ரெண்ட்..!

வேதாளத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்ற தகவலை மீண்டும் இன்று உறுதிப்படுத்தியுள்ளார் அனிருத்.

அஜித்-சிவா கூட்டணியில் மீண்டும் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அனிருத்.

இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்? என்பது உறுதியாகாத நிலையில், இரண்டு காமெடி நடிகர்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவர் கருணாகரன் என்பதை நாம் முன்பே நம் தளத்தில் வெளியிட்டு இருந்தோம்.

தற்போது இப்படத்தில் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான நடிகர் சதீஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் விஜய் 60 படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் இரண்டு படத்தில் நடித்துவிட்டாலும், அஜித்துடன் இவர் இணைவது இதான் முதன்முறையாகும்.