சந்தானம், சூரியை தொடர்ந்து அஜித்துடன் இணையும் காமெடியன்..!


சந்தானம், சூரியை தொடர்ந்து அஜித்துடன் இணையும் காமெடியன்..!

சிவா இயக்கத்தில் தல 57 படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார் அஜித்.

இதில் இவருடன் பணியாற்றவுள்ள நடிக, நடிகையர்கள் யார்? யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

சந்தானம் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது கருணாகரன் நடிக்கலாம் என தகவல்கள் வந்துள்ளன.

வீரம் படத்தில் சந்தானம், வேதாளம் படத்தில் சூரி ஆகியோர் அஜித்துடன் நடித்திருந்தனர்.

தற்போது முதன்முறையாக அஜித்துடன் கருணாகரன் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.