ரஜினி, தனுஷை அடுத்து விக்ரமுடன் இணையும் பிரபல நடிகர்..!


ரஜினி, தனுஷை அடுத்து விக்ரமுடன் இணையும் பிரபல நடிகர்..!

கடந்த 2012ஆம் ஆண்டில் வெளியான சுந்தர் சியின் கலகலப்பு படம் மூலம் அறிமுகமானவர் கருணாகரன்.

ஐந்து ஆண்டுகள் கூட இன்னும் முழுமையாக முடியாத நிலையில், கிட்டதட்ட 30 படங்களை கடந்து விட்டார். ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்து விட்டார்.

தற்போது கைவசம் ஒரு டஜன் படங்களை வைத்துள்ளார்.

ரஜினியுடன் லிங்கா, பிரபு சாலமன் இயக்கியுள்ள தனுஷ் படம், உதயநிதியுடன் கெத்து ஆகிய முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடித்துள்ளார்.

தற்போது முதன்முறையாக விக்ரமுடன் இணைந்து, இருமுகன் படத்தில் நடித்து வருகிறார். கணிதன் படத்தை பார்த்த விக்ரமே இவரை இப்படத்துக்கு சிபாரிசும் செய்தாராம்.