கமல்ஹாசன், விஜய் இடத்தில் இப்போ கார்த்தி..!


கமல்ஹாசன், விஜய் இடத்தில் இப்போ கார்த்தி..!

சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகள் சினிமா ஸ்டூடியோக்களால் நிறைந்த இருந்தது.

ஆனால், இன்று அந்த ஸ்டூடியோக்கள் எல்லாம் அழிந்து, அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாறிக் கொண்டிருக்கிறது.

இருந்தபோதிலும் திரைத்துறையினருக்காக சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஸ்டூடியோதான் ஆதித்யா ராம் ஸ்டூடியோஸ்.

பட அதிபர் ஆதித்யா ராம் அவர்களால் தொடங்கப்பட்ட இது ஈ.சிஆர் சாலையில் அமைந்துள்ளது. இந்த ஸ்டூடியோவில்தான் உலகநாயகன் கமலின் தசாவதாரம், இளைய தளபதியின் விஜய்யின் புலி உள்ளிட்ட பல படங்களின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

தற்போது கார்த்தி – நயன்தாரா இணைந்து நடித்துவரும் ‘காஷ்மோரா’ படத்தின் படப்பிடிப்பு இதே ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.

கோகுல் இயக்கும் இப்படத்தில் ஸ்ரீதிவ்யா மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன்.