இணையத்தை கலக்கும் கஸ்தூரியின் டாப்லெஸ் போட்டோஸ்!


இணையத்தை கலக்கும் கஸ்தூரியின் டாப்லெஸ் போட்டோஸ்!

‘மிஸ் மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கஸ்தூரி. இவர் சத்யராஜுடன் நடித்த ‘அல்வா’ தாயம்மா கேரக்டர் இவரை தமிழகம் முழுவதும் பிரபலமடைய வைத்தது. மேலும் ‘ஆத்தா உன் கோயிலிலே’, ‘செந்தமிழ் பாட்டு’, ‘இந்தியன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்னர் அமெரிக்கா டாக்டர் ரவிக்குமாரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இந்த தம்பதியருக்கு தற்போது ஷோபினி மற்றும் சங்கல்ப் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது கஸ்தூரி டாப்லெஸ் தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன் A Beautiful Body Project (எ பியூட்டிபுல் பாடி ப்ராஜெக்ட்) என்ற ஒரு திட்டத்திற்காக இப்படியொரு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஜேட் பியால் என்ற புகைப்படக் கலைஞர் குழந்தை பெற்ற பின்னர் பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து புகைப்படங்களை எடுத்து அதை பதிவு செய்து வருகிறாராம். இதில்தான் நடிகை கஸ்தூரியின் டாப்லெஸ் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதாம். இதனை ஒரு புத்தகமாகவும் ஜேட் பியால் தயார் செய்து வைத்திருக்கிறார். விரைவில் இப்புத்தகங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.