முதன்முறையாக தனுஷுடன் இணையும் ‘கயல்’ ஆனந்தி!


முதன்முறையாக தனுஷுடன் இணையும் ‘கயல்’ ஆனந்தி!

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘தங்க மகன்’. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை டிசம்பர் 18ஆம் தேதி வெளியிட தயாராகி வருகிறார் தனுஷ்.

இதனைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் ஒரு புதிய படத்திலும் நடித்துள்ளார். இதுவரை பெயரிடாத இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தனுஷின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இப்படத்தில் முதன்முறையாக ஜோடியாக இணைந்துள்ளனர்.

இவர்களுடன் தம்பி இராமையா, கருணாகரன், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தில் ‘கயல்’ ஆனந்தியும் இணைந்துள்ளார். இவர் படத்தின் முக்கிய கேரக்டரில் வருகிறாராம். மேலும் ராதாரவியும் எம்.எல்.ஏ. கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை ஒரு ஆக்ஷன் த்ரில்லராக உருவாக்கியுள்ளார் இயக்குனர் பிரபு சாலமன்.

இதனிடையே ‘சாட்டை’ பட இயக்குனர் இயக்கும் புதிய படத்தை பிரபு சாலமன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் கயல் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.