கயல் சந்திரன், அனிருத்துடன் இணையும் தனுஷ் பட இயக்குனர்!


கயல் சந்திரன், அனிருத்துடன் இணையும் தனுஷ் பட இயக்குனர்!

‘மன்மத ராசா’ என்ற பாடல் மூலம் தமிழகத்தின் சின்னஞ் சிறுசுகளை ஆட்டுவித்தவர் இயக்குனர் சுப்ரமணிய சிவா. ‘திருடா திருடி’ படத்தில் இடம்பெற்ற இப்பாடல் தனுஷை பட்டி தொட்டியெங்கும் வரை கொண்டு சென்றது என்று சொன்னால் அது மிகையல்ல.

இதனைத் தொடர்ந்து ‘பொறி’, ‘யோகி’ மற்றும் ‘சீடன்’ ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் இப்படங்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை என்பதால் இயக்கத்திற்கு சிறிய இடைவெளி கொடுத்து இருந்தார்.

தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ரீஎண்ட்ரி கொடுக்கவிருக்கிறார் சுப்ரமணிய சிவா. இவர் இயக்கும் புதிய படத்தில் கயல் சந்திரன் நாயகனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் எனத் தெரிகிறது.