மம்மூட்டி தலைமை தாங்க, மணப்பெண் தோழியானார் கீர்த்தி..!


மம்மூட்டி தலைமை தாங்க, மணப்பெண் தோழியானார் கீர்த்தி..!

பிரபல மலையாள நடிகர் ரத்தீஷ், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தமிழிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார்.

இவர் பார்ப்பதற்கு நடிகர் சிவச்சந்திரன் சாயலில் இருப்பார்.

இவர் தனது 48ஆம் வயதில் கடந்த 2002 ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார்.

இவருக்கு டயானா என்ற மனைவியும் இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவரது மூத்த மகள் பத்மாவுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது.

அப்போது தன் நண்பரின் மகள் திருமணம் என்பதால், மம்மூட்டி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

இதில் மணப்பெண் பத்மாவின் தோழியாக கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார்.

இவர்களுடன் திலீப் மற்றும் மஞ்சு வாரியாரும் கலந்து கொண்டர். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்ற பின்னர் எந்த விழாவிலும் ஒன்றாக கலந்து கொள்வதில்லை.

இதில் கலந்து கொண்டாலும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்காமலே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.