‘விஜய் 60’… இளையதளபதியுடன் இணையும் கலைஞர்கள்.!


‘விஜய் 60’… இளையதளபதியுடன் இணையும் கலைஞர்கள்.!

அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தை தொடர்ந்து ‘விஜய் 60 ’ படத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்தை ‘கில்லி’, ‘வீரம்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியவரும், ‘அழகிய தமிழ் மகன்’ படத்தின் இயக்குனருமான பரதன் இயக்குகிறார்.

இப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு விஜயா புரொடக்‌ஷன்ஸ் அலுவலகத்தில் மிக எளிமையாக நடைபெற்றது. தற்போது படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய்யுடன் சதீஷ் மீண்டும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். எடிட்டராக ப்ரவீன், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணியாற்றவுள்ளனர்.

இதுநாள் வரை நீடித்து வந்த நாயகி வேட்டை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், விஜய்யின் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.