சிவகார்த்திகேயனிடம் வித்தை கற்ற கீர்த்தி சுரேஷ்!


சிவகார்த்திகேயனிடம் வித்தை கற்ற கீர்த்தி சுரேஷ்!

நடித்து ஒரு படம் கூட வெளியாகாத நிலையில் தமிழில் மளமளவென படங்களில் ஒப்பந்தமானார் கீர்த்தி சுரேஷ். விக்ரம் பிரபுவுடன் இவர் நடித்த ‘இது என்ன மாயம்’ என்ற ஒரு படம் மட்டுமே வெளியாகியுள்ளது.   சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ‘ரஜினிமுருகன்’ படம் இன்னும் கிடப்பில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து பாபி சிம்ஹாவுடன் பாம்பு சட்டை’, தனுஷுடன் ஒரு படம் ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அப்படத்தில் நடிப்பதற்கு இவர் கதை கூட கேட்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்துள்ள கீர்த்தி தன் நாயகன் பற்றி பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது…

“முதலில் ‘ரஜினிமுருகன்’ படத்தில் நடிக்கும்போது சிவகார்த்திகேயன் மற்றும்  சூரியுடன் நடிக்கும்போது தயக்கம் இருந்ததாம். அவர்களின் ஸ்பீடுக்கு இவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. அதன்பின்னர் அவர்களின் ரிகர்சலில் இவரும் கலந்து கொண்டாராம். அதன்பின்னரே இவரும் கவுண்டர் கொடுக்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் கற்றுள்ள கவுண்டர் வசனங்களுக்கு சிவகார்த்திகேயன்தான் காரணம் என்கிறார் கீர்த்தி சுரேஷ்”.

ஓ.. அதான் ரஜினிமுருகன் ட்ரைலர ‘உன்ன பார்த்தா கலாய்க்க கூட தோனலடா’ அப்படின்னு சொன்னீங்களா?