விஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..!


விஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..!

இது என்ன மாயம் என்ற படத்தில் தமிழில் அறிமுகமானாலும், அப்படம் கீர்த்தி சுரேஷுக்கு பெரிய மாற்றத்தை கொடுக்கவில்லை.

ஆனால் சிவகார்த்திகேயனுடன் இணைந்த ரஜினிமுருகன் இவரை முன்னணி நடிகை வரிசை பட்டியலில் இடம் பெற செய்தது.

தற்போது சிவகார்த்திகேயனுடன் ரெமோ, தனுஷுடன் தொடரி, விஜய்யுடன் தளபதி 60 ஆகிய படங்களில் வருகிறார்.

இதனிடையில் இப்படங்களில் கமிட் ஆகும் முன்பே, பாபி சிம்ஹாவுடன் பாம்பு சட்டை படத்தில் நடித்தார்.

ஆனால் அப்படம் சில பிரச்சினைகளால் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படம் வெளியாகாமல் இருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் கீர்த்தி.