தனுஷுடன் ஜுன் 6, சிவகார்த்திகேயனுடன் ஜுன் 9… காத்திருக்கும் கீர்த்தி..!


தனுஷுடன் ஜுன் 6, சிவகார்த்திகேயனுடன் ஜுன் 9… காத்திருக்கும் கீர்த்தி..!

தமிழ் சினிமாவில் நுழைந்து ஒரு படம் கூட வெளிவராத நிலையில் மளமளவென படங்களை ஒப்புக் கொண்டவர் கீர்த்தி சுரேஷ்.

சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினிமுருகன் வெற்றிப்பெறவே, தனுஷ் உடன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, விஜய்யுடன் தளபதி 60, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள தொடரி படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் ஜுன் 6ஆம் தேதி வெளியாகிறது.

இதனையடுத்து, பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் ஜுன் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

எனவே, இந்த இரு நாட்களாக காத்திருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.