KIK நாயகனுடன் ஒட்டிக் கொண்ட சிவகார்த்திகேயன் ஜோடிகள்!


KIK நாயகனுடன் ஒட்டிக் கொண்ட சிவகார்த்திகேயன் ஜோடிகள்!

மியூசிக் டைரக்டர் ஜிவி பிரகாஷை விட ஹீரோ ஜிவி பிரகாஷ் படு பிஸியாக இருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்ற படத்திலும் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் ‘புரூஸ் லீ’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ என்ற படத்திலும் நடிக்கவிருக்கிறார். இதன் சுருக்கமே KIK என்பதாகும். இதில் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இப்படத்திற்கான நாயகி தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் ப்ரியா ஆனந்த் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ப்ரியா ஆனந்த் ‘எதிர் நீச்சல்’ படத்திலும், கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ரஜினி முருகன்’ படத்திலும் நடித்துள்ளனர். ரஜினிமுருகன் 2016ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.