சிவகார்த்திகேயனுடன் நடிச்சது பொய்யா..? கீர்த்தியை கலாய்க்கும் விஜய்..!


சிவகார்த்திகேயனுடன் நடிச்சது பொய்யா..? கீர்த்தியை கலாய்க்கும் விஜய்..!

ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த ராசி, கீர்த்தி சுரேஷை தளபதி 60 படத்தில் விஜய்யுடன் ஜோடி போட வைத்தது.

இவர்களுன் சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், அபர்னா வினோத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பரதன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பில், கீர்த்தி சுரேஷ் மிகவும் பதட்டமாக இருந்தாராம். எனவே இதனைக் கண்ட விஜய் கீர்த்தியை அழைத்து பேசினாராம்.

‘என்ன கீர்த்தி, ரஜினிமுருகன் படத்துல சிவகார்த்திகேயனுடன் அப்படி கலகலப்பாக பேசி கலக்கியிருந்தீங்க. ஆனா இப்போ அப்படியில்லையே.

அப்போ அது பொய்யா? இல்ல இது பொய்யா? என கீர்த்தியை கலாய்த்தாராம் விஜய்.