சிவகார்த்திகேயன் மூலம் அம்மா ஆசையை நிறைவேற்றிய கீர்த்தி..!


சிவகார்த்திகேயன் மூலம் அம்மா ஆசையை நிறைவேற்றிய கீர்த்தி..!

‘நெற்றிக்கண்’ படத்தில் ரஜினியுடன் நடித்தவர் மேனகா. இவர் மலையாள தயாரிப்பாளர் சுரேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு கேரளாவில் செட்டிலாகிவிட்டார்.

இவரது இளைய மகள் கீர்த்தி சுரேஷ்தான் தற்போது விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் டூயட் பாடி வருகிறார்.

ஆனால் மேனகாவுக்கு தன் மகளை ஒரு டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசையாம். ஆனால் மகளோ சினிமாவை தேர்ந்தெடுத்துவிட்டார். (நல்லவேளை, ஒரு அழகான டாக்டர் மிஸ் ஆச்சு.. ஆனா அழகான ஹீரோயின் கிடைச்சாச்சு… )

சரி.. விடுங்க.. விஷயத்துக்கு வருவோம்..

இப்போ தன் அம்மாவின் ஆசையை சிவகார்த்திகேயன் மூலம் நிறைவேற்றி விட்டாராம் கீர்த்தி. இவர் தற்போது நடித்து வரும் ‘ரெமோ’ படத்தில் சிவா நான்கு வேடங்களில் நடிக்கிறார்.

அதில் ஒரு கேரக்டரில் நர்ஸ் ஆக பெண் வேடமிட்டு வருகிறாராம் சிவா. இவருடன் நடித்துள்ள கீர்த்தி, அதில் டாக்டராக வருகிறாராம்.

இப்படியாக அம்மாவின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் இந்த அழகுப் பொண்ணு.