இளைய தளபதியுடன் காஜலா? கீர்த்தியா?? நிலவும் கடும் போட்டி..


இளைய தளபதியுடன் காஜலா? கீர்த்தியா?? நிலவும் கடும் போட்டி..

அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தில் நடித்து முடித்து விட்டார் விஜய். விறுவிறுப்பாக படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதால் ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகும் என்று தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து பரதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். இதன் பூஜை ஓரிரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.

இதில் விஜய்யுடன் காஜல் அகர்வால் நடிக்கிறார் எனக் கூறப்பட்டது. பின்னர் மியா ஜார்ஜ் நடிக்கிறார் எனவும் தகவல்கள் வந்தன. இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் மியா.

தற்போது 2016ஆம் ஆண்டின் முதல் வெற்றியைக் கொடுத்த சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.