விஜய்யின் பாராட்டைப் பெற கீர்த்தி சுரேஷ் போட்ட ப்ளான்..!


விஜய்யின் பாராட்டைப் பெற கீர்த்தி சுரேஷ் போட்ட ப்ளான்..!

சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ என்ற ஒரே படத்தின் ராசியால் தமிழகத்தின் முன்னணி நடிகையின் வரிசையில் இணைந்தார் கீர்த்தி சுரேஷ்.

இதனை தொடர்ந்து தனுஷ் மற்றும் விஜய் படங்களின் நாயகியாக உருவெடுத்தார்.

தற்போது பரதன் இயக்கும் விஜய் 60 படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.

எனவே பல மாதங்களாக விஜய்யுடன் நடிக்க நிறைய ஹோம் வொர்க் செய்து வருகிறாராம்.

இந்நிலையில் விஜய்யுடன் கீர்த்தி ரொமான்ஸ் செய்யும் காட்சிகளைதான் அப்போது பரதன் படமாக்கினாராம்.

அதுவும் சிங்கிள் டேக்கில் ஓகே செய்துவிட்டாராம் கீர்த்தி.

இதனால் கீர்த்தி சுரேஷ்ஷை விஜய் பாராட்டித் தள்ளினாராம்.