விஜய்யை தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களுடன் கீர்த்தி..!


விஜய்யை தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களுடன் கீர்த்தி..!

ரஜினி முருகன் ஹிட் அடித்தாலும் அடித்தது.. அம்மணி கீர்த்தி சுரேஷ் காட்டில் வாய்ப்பு மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி வருகிறது.

சென்னை வெள்ளத்தில் வீட்டிற்குள் மாட்டிக் கொண்டு தத்தளித்த இவர் இந்த வாய்ப்பு மழையில் துள்ளி குதிக்கிறாராம்.

பரதன் இயக்கத்தில் விஜய்யுடன் ஒரு படம், சிவகார்த்திகேயனுடன் ரெமோ படம் என கெத்து காட்டி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுடன் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள இப்படம் பெரும் பொருட் செலவில் உருவாகவிருக்கிறது.

இதனையடுத்து, வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் கீர்த்தி நடிக்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தெலுங்கு உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நாயகனாக நடிக்கிறார்.