கீர்த்தியை கலாய்த்த விக்ரம் ரசிகர்கள்… காப்பாற்றிய இயக்குனர்..!


கீர்த்தியை கலாய்த்த விக்ரம் ரசிகர்கள்… காப்பாற்றிய இயக்குனர்..!

‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து ‘கருடா’ படத்திலும் நடிக்கவிருக்கிறார் விக்ரம். இப்படத்தை இயக்குனர் திரு இயக்குகிறார்.

இவர் விஷால் நடித்த ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருடா படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆனால், முதலில் இக்கேரக்டரில் நடிக்க கீர்த்தி சுரேஷை கேட்டதாகவும் அவர் விக்ரமின் வயதை காரணம் காட்டி நடிக்க மறுத்ததாக கூறப்பட்டது.

இதனையறிந்த விக்ரம் ரசிகர்கள் கீர்த்தியை இணைய தளங்களில் கலாய்க்க ஆரம்பித்தனர்.

இதுகுறித்து கருடா இயக்குனர் திரு கூறியதாவது…

“கருடா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்கத்தான் நாங்கள் முடிவு செய்தோம். இதுகுறித்து வேறு எந்த நடிகையுடனும் நாங்கள் பேசவில்லை.

இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் பற்றி வரும் செய்திகளில் உண்மையில்லை” என்று கூறியுள்ளார்.