தமிழ் ஹீரோக்களுக்கு பயப்படும் கேரளத்து சேட்டன்ஸ்


தமிழ் ஹீரோக்களுக்கு பயப்படும் கேரளத்து சேட்டன்ஸ்

தங்கள் அபிமான நடிகர்கள் நடித்த படம் எப்போது வரும்? எப்படி வித்தியாசமாக கொண்டாடலாம், என்று ரூம் போட்டு யோசித்து வருகின்றனர் தமிழக ரசிகர்கள். ஆனால் நம் கேரளத்து சேட்டன்ஸ், அதாங்க கேரளத்து ஹீரோக்கள் நம் தமிழ் ஹீரோக்களின் படங்கள் அதிகளவில் கேரளாவில் வெளியாவது குறித்து கவலை கொண்டுள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் ஹீரோவாக நடித்து நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் ”. இந்த படத்துக்கு தமிழகத்தைப் போல் கேரளாவிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரை அஜித் படத்திற்கு கேரளாவில் பெரிய வரவேற்பு இருந்தது இல்லை. ஆனால், இப்படம் புதிய மார்க்கெட்டை அஜித்திற்கு அமைத்துக் கொடுத்துள்ளது. முதல்முறையாக அஜித் திரைப்படம் ஒன்று கேரளாவில் 100 மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்திற்கு புக்கிங் படுவேகமாக நடந்து வருகிறதாம். எனவே, இன்று வெளியாக இருந்த கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த ஃபயர்மேன் திரைப்படம் அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ரஜினி, கமல், விஜய் மற்றும் சூர்யா படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் வெளியான  ‘லிங்கா’, ‘கத்தி’ மற்றும் ‘ஐ’ திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

இவ்வாறாக தமிழ் படங்கள் வசூல் வேட்டை செய்வதாலும் தங்கள் படங்களுக்கு தியேட்டர் சரியாக கிடைக்காததாலும், தமிழ் ஹீரோக்களின் படங்கள் கேரள திரைப்பட கலைஞர்களை கவலையடையச் செய்துள்ளது.