“25 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத வாக்குறுதி.. மேடையில் உறுதி தந்த முதல்வர்!!”


“25 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத வாக்குறுதி.. மேடையில் உறுதி தந்த முதல்வர்!!”

கேரள அரசின் சுற்றுலா துறை சார்பில் ஆண்டு தோறும் நிஷாகந்தி நடனம் மற்றும் இசை விழா நடத்தப்பட்டு வருகிறது.

இவ்விழா நேற்று திருவனந்தபுரத்தில் தொடங்கியது.

முதல் அமைச்சர் உம்மன் சாண்டி குத்துவிளக்கேற்ற சுற்றுலா துறை மந்திரி ஏ.பி.அனில் குமார் தலைமை தாங்கினார்.

இவ்விழா வருகிற 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் இசையுலகில் சாதனை படைத்த இளையராஜாவுக்கு நிஷாகந்தி விருதை உம்மன்சாண்டி வழங்கினார்.

மேலும் கலை இலக்கிய துறையில் சாதனை படைத்த சூர்யா கிருஷ்ணமூர்த்திக்கும் விருது வழங்கப்பட்டது.

பின்னர் விழாவில் பேசிய உம்மன்சாண்டி கூறியதாவது…

இளையராஜாவுக்கு நிஷாகந்தி விருதை வழங்கியதன் மூலம் கேரளம் பெருமை கொள்கிறது.

இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க 5 ஏக்கர் நிலத்தை கேரள அரசு சார்பில் தருவதாக 25 ஆண்டுகளுக்கு முன்பே வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை நிறைவேறாத அந்த வாக்குறுதி உடனே நிறைவேற்றப்படும்” என்றார்.