கேரள ரசிகர்களை வருத்தத்திலாழ்த்தியுள்ள ‘தெறி’ டைட்டில்?


கேரள ரசிகர்களை வருத்தத்திலாழ்த்தியுள்ள ‘தெறி’ டைட்டில்?

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘விஜய் 59’ படத்தின் டைட்டில் நேற்று மாலை வெளியானது. இப்படத்திற்கு ‘வெற்றி’, ‘காக்கி’, ‘தாறுமாறு’ என பல தலைப்புகள் கூறப்பட்டு வந்தாலும் எவரும் எதிர்பாராத வகையில் ‘தெறி’ என தலைப்பிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்று வெளியிட்டனர்.

சாதாரண தலைப்பாக இருந்தாலே விஜய் ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டாங்க. இது மாஸான தலைப்பாக வேற இருக்கு.. அப்போ சும்மா இருப்பாங்களா? ட்விட்டர், பேஸ்புக் என சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் ப்ளக்ஸ், பேனர், போஸ்டர் என ‘தெறி’ டைட்டிலை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் விஜய்யின் ‘வெறி’த்தனமான ரசிகர்கள்.

ஆனால் ஒரு சில ரசிகர்களுக்கு இந்த டைட்டில் பிடிக்கவில்லையாம். முக்கியமாக விஜய்யின் கேரளத்து ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம். ‘தெறி’ என்றால் மலையாள மொழியில் ஒரு கெட்ட வார்த்தையை குறிக்கும் சொல்லாகுமாம்.

எனவே இது தங்கள் மனம் கவர்ந்த விஜய்யின் படத்திற்கு வைத்திருப்பதால் கேரள ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.​

இது தொடர்பான செய்திகள்…

அஜித்தின் வேதாளத்தை குறிவைக்கிறதா விஜய்யின் ‘தெறி’?