தேர்தல் தோல்வி… ‘கில்லி’ விஜய் போல் பதிலளித்த குஷ்பூ..!


தேர்தல் தோல்வி… ‘கில்லி’ விஜய் போல் பதிலளித்த குஷ்பூ..!

கோயில் கட்டும் அளவுக்கு சினிமா ரசிகர்களை வசியம் செய்து வைத்திருந்தவர் நடிகை குஷ்பூ.

தற்போதும் சின்னத்திரை, வெள்ளித்திரை என பவனி வந்தாலும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

ஆனால் அதிமுக கட்சியே அதிக இடங்களை பெற்று மீண்டும் முதல் அமைச்சராக ஜெயலலிதா இன்று பதவியேற்கிறார்.

இதனிடையில், தங்கள் கூட்டணி தோல்வி குறித்து குஷ்பு கூறியதாவது…

‘சிலருக்கு வெற்றி கிடைக்கும். சிலருக்கு தோல்வி கிடைக்கும். இதான் வாழ்க்கை சக்கரம்” என்றார்.

வாழ்க்கை ஒரு வட்டம் டா. இங்க தோக்கிறவன் ஜெயிப்பான், ஜெயிக்கிறவன் தோப்பான். என்று கில்லி படத்தில் விஜய், இதுபோல் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.