ஓட்டுப் போடுங்க… இலவசமா ‘கோ 2′ பாருங்க…!


ஓட்டுப் போடுங்க… இலவசமா ‘கோ 2′ பாருங்க…!

வாக்காளர்களை கவர, அரசியல் கட்சிகள் என்னென்ன திட்டங்களை போடலாம்? என யோசித்து வருகின்றனர்.

அதுபோல சினிமா தயாரிப்பாளர்களும் புதுப்புது ஐடியாக்களை கையாள்கின்றனர்.

இந்நிலையில் அரசியலை சினிமாவையும் இணைக்கும் வகையில், கோ 2 படத்தயாரிப்பாளர் புது வகையான இலவச திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

இந்த தேர்தலில் நீங்கள் வாக்களித்துவிட்டு, விரலில் உள்ள மையுடன் உங்களை செல்ஃபி எடுத்து 8682888038 இந்த நம்பருக்கு தங்கள் முகவரியுடன் அந்த புகைப்படத்தை அனுப்ப வேண்டும்.

அதில் 500 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ‘கோ 2′ படத்துக்கான இலவச டிக்கெட் வழங்கப்படவிருக்கிறதாம். 100% வாக்குப்பதிவிற்காக ‘கோ 2′ படக்குழுவினரின் வித்தியாசமான முயற்சிதான் இது.

பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள இப்படம் நாளை மறுநாள் மே 13ஆம் தேதி வெளியாகிறது. சரத் இப்படத்தை இயக்க, எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இசை லியோன் ஜேம்ஸ்.