தனுஷ்-த்ரிஷா நடிக்கும் ‘கொடி’ சூட்டிங் நிறுத்தம்..!


தனுஷ்-த்ரிஷா நடிக்கும் ‘கொடி’ சூட்டிங் நிறுத்தம்..!

முதன்முறையாக தனுஷுடன் உடன் த்ரிஷா இணைந்து நடித்து வரும் படம் ‘கொடி’. துரை செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் எஸ். ஏ. சந்திரசேகரன், சதீஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

ஷாம்லி இப்படத்திலிருந்து விலகியதை அடுத்து, ‘பிரேமம்’ நாயகி மடோனா என கூறப்பட்டது. ஆனால் தற்போது அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு இன்று கோவையில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வந்தது.

அங்கு தனுஷை கண்டதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கல்லூரி வளாகத்தில் குவிந்தனர். எனவே, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.