தீபாவளி விளம்பரங்களில் அசத்தும் தமிழ் நடிகர்கள்!


தீபாவளி விளம்பரங்களில் அசத்தும் தமிழ் நடிகர்கள்!

ஒவ்வொரு டிவி சேனல்களாக மாற்றினால் நிகழ்ச்சிகளைத் தவிர தீபாவளி விளம்பரங்களே அதிகமாக வருகின்றன. அதிலும் தற்போது பெண்களுக்கான ஆடை விளம்பரங்களை விட ஆண்களுக்கான விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன.

இதனால் நம் தமிழ் நடிகர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. நடிகர்களில் ரஜினிகாந்த் மட்டுமே இதில் மிச்சம் இருக்கிறார் எனலாம். ரஜினிக்கு இன்றளவும் மாஸ் இருந்தாலும் அவர் எந்த ஒரு பொருளையும் விளம்பர செய்ய மாட்டேன் என்ற கொள்கையில் இருக்கிறார். ஆனால் 55 ஆண்டு காலமாக சினிமாவில் இருந்த கமல் முதன்முதலாக சமீபத்தில் போத்தீஸ் விளம்பரத்தில் நடித்து விட்டார். விஜயகாந்த் முழுநேர அரசியலில் இறங்கிவிட்டதால் இனி விளம்பரங்களில் தோன்ற வாய்ப்பில்லை. அஜித் சில வருடங்களுக்கு முன் சன்ரைஸ் காஃபி விளம்பரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது விளம்பரங்களில் நடித்து வரும் நம் தமிழ் நடிகர்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

கமல்ஹாசன் : போத்தீஸ்
விஜய் : ஜோஸ் ஆலுக்காஸ், டாடா டொக்மோ
சூர்யா : சரவணா ஸ்டோர்ஸ், மலபார் கோல்ட், ஏர்செல்
கார்த்தி : தி சென்னை சில்க்ஸ், ப்ரு காபி
ஜெயம் ரவி : ஆலயா வேட்டிகள்
தனுஷ் : ஹேர் ஆயில், ஓ எல் எக்ஸ்
சிவகார்த்திகேயன் : போத்தீஸ்
விக்ரம் : மணப்புரம் கோல்ட்
ஜெயராம் : ராம்ராஜ் வேட்டிகள்
ரியாஸ் கான் : ஐடியல் பனியன்கள்
பரத் : கிரிஸ்டல் வேட்டிகள்
பிரபு : கல்யாண் ஜீவல்லர்ஸ், எம் சி ஆர் வேட்டிகள்
சரத்குமார் : எம் சி ஆர் வேட்டிகள், இரும்பு கம்பிகள், பூமெக்ஸ்
மாதவன் : ஜாய் ஆலுக்காஸ்
பிரகாஷ்ராஜ் : கே.எப். ஜே. ஜுவல்லர்ஸ்
சத்யராஜ் : ஆச்சி சிக்கன் மசாலா, பூமர் வேட்டிகள்,
அர்ஜுன் : டேன்டெக்ஸ்
துல்கர் சல்மான் : ஓட்டோ சர்ட்ஸ்
ராதாரவி : நேஷ்னல் வேட்டிகள்
நெப்போலியன் : உதயம் வேட்டிகள்

நடிகைகளின் விளம்பர பட்டியல் இதை விட நீளம் அதிகம்… எனவே அடுத்த முறை அதனைப் பார்ப்போம்.