தேர்தலில் வெற்றி-தோல்வி அடைந்த நட்சத்திரங்கள் யார்..?


தேர்தலில் வெற்றி-தோல்வி அடைந்த நட்சத்திரங்கள் யார்..?

தமிழக அரசியலை பொறுத்தவரை, அதன் நுழைவுவாயில் கோடாம்பாக்கத்தில் உள்ளதாக கூறப்படுவது உண்டு.

அதற்கு காரணம் கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசியலும் சினிமாவும் அப்படி ஒன்றோடு ஒன்றோக கலந்துள்ளது.

கருணாநிதி, எம்.ஜி.ஆர், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், சிவாஜி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் தொடங்கி விஜயகாந்த், சரத்குமார் வரை தொடர்கிறது.

இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் விஜயகாந்த், சரத்குமார், வாகை சந்திரசேகர், கருணாஸ், சீமான், சி.ஆர்.சரஸ்வதி ஆகிய நட்சத்திரங்கள் போட்டியிட்டனர்.

இவர்களில் வெற்றி பெற்றவர்கள் யார்? தோல்வி அடைந்தவர்கள் யார் என்பதை பார்ப்போம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதல்வர் வேட்பாளராக உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு டெபாசிட் தொகை கூட கிடைக்காமல் படு தோல்வி அடைந்துள்ளார்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சரத்குமார், திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோற்றுப் போனார்.

கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் டெபாசிட் இழந்தார்.

பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சி.ஆர்.சரஸ்வதி வெற்றி பெற்றார்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்ட கருணாஸ் வெற்றி பெற்றுள்ளார்.

வேளச்சேரி தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நடிகர் வாகை சந்திரசேகர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் வெற்றிப்பெற்ற கருணாஸ் மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோருக்கு நடிகர் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.