ரீப்பீட்டு; கிருஷ்ணசாமி மீது ஞானவேல்ராஜா வழக்கு!


ரீப்பீட்டு; கிருஷ்ணசாமி மீது ஞானவேல்ராஜா வழக்கு!

பல எதிர்ப்புக்கு மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் ‘கொம்பன்’ படம் கடந்த வாரம் வெளியானது. படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வழக்கு தொடர்ந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கும் கொம்பன் படத்திற்கும் நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது.

படமும் ஏப்ரல் 1ஆம் தேதி அன்று ‘மக்களை ஏமாற்றாமல்’ மாலை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  தற்போது ‘கொம்பன்’ படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர் படக்குழுவினர். இப்படத்தின் வெற்றியை பகிர்ந்து கொள்ள இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர் அவர்கள். அப்போது  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது…

“கிருஷ்ணசாமி சார் எதிர்ப்பால் சுமார் 100 திரையரங்குகள் குறைவாக படம் வெளியானது. பிரச்சினைக்கு பயந்து வாங்க மறுத்துவிட்டனர். ஆனால் தற்போது படம் நன்றாக ஓடுவதால் திரையரங்குகளை அதிகரிக்க இருக்கிறோம்.

மேலும் படத்தை தாமதமாக அனுப்பினால், அதற்கான பணத்தை கழித்துக் கொண்டுதான் கொடுப்போம் என்று ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. எனவே, அந்த பணத்தை ஒப்பந்தப்படி கழித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள் விநியோகம் செய்தவர்கள். கிருஷ்ணசாமி பிரச்சினையால் வெளிநாட்டுக்கு சரியான நேரத்தில் படத்தை அனுப்பமுடியவில்லை. இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு அவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறேன்” என்றார்.