அடுத்த பேய் வருது… ‘கோப்பெருந்தேவி’ ஆராத்யா!


அடுத்த பேய் வருது… ‘கோப்பெருந்தேவி’ ஆராத்யா!

வருகிற படங்களைப் பார்த்தால் தமிழ் சினிமாவுக்கு பேய் பிடித்துவிட்டதா? என்று தெரியவில்லை. மாதம் ஒரு பேய் படம் வந்துக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘பிசாசு’,’ டார்லிங்’, ‘யாமிருக்க பயமே’, ‘அரண்மனை’, ‘காஞ்சனா’ இவை அனைத்தும் பேய் கதை கொண்ட படங்களே. இதில் எந்த படமும் சோடை போகவில்லை. மாறாக ரசிகர்களை பயமுறுத்தி கலெக்ஷனை அள்ளியது.

இந்நிலையில் பேய் படங்களின் வெற்றிக்கு காரணமான நடிகர் நடிகைகளை தேடிப்பிடித்து  அவர்களை கொண்டு ஒரு புதிய படம் தயாராகியுள்ளது.  ‘கோப்பெருந்தேவி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்புதிய படத்தை இயக்கியிருக்கிறார் சங்கர் பழனிச்சாமி. இப்படத்தில் கோவை சரளா, ஊர்வசி, மனோபாலா, வி.டிவி.கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இளவரசு, லொள்ளு சாமிநாதன், மனோகர், பாண்டு, வெண்ணிறாடை மூர்த்தி, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக பனி பொழியும் லடாக் பகுதியில் செட் போட்டு இப்படத்தை படமாக்கியுள்ளனர். அழகுக்கு பெயர்போன கேரளாவில் இருந்து ஆராத்யா என்ற நடிகையை பேயாக களம் இறக்கியிருக்கிறார்களாம்.