உயிருடன் உள்ள சோவை இறந்துவிட்டதாக கூறிய குஷ்பூ!


உயிருடன் உள்ள சோவை இறந்துவிட்டதாக கூறிய குஷ்பூ!

ஒரு புத்தகத்தை திறந்தால் இரண்டு பக்கங்கள் இருக்கும். அதுபோல குஷ்பூ ஏதாவது சொல்ல வாயை திறந்தால் அத்துடன் சர்ச்சையும் இருக்கும். இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இன்று மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

பிரபல நடிகரும்துக்ளக்‘  பத்திரிகையின் ஆசிரியருமான சோ ராமசாமி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். மூச்சுத் திணறல் காரணமாக ஓரிரு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளருமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் சோ இறந்துவிட்டதாக கூறி இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தார்.

இதனைக்கண்ட வலைத்தள வாசிகள்… உயிருடன் இருக்கும் ஒருவரை இறந்துவிட்டதாக கூறிய குஷ்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனவே சுதாரித்துக் கொண்ட குஷ்பூ ன் தவறை உணர்ந்து தனது தகவலுக்கு மன்னிப்பு கோரினார்.  தன் தவறுக்கு ஆயிரம் முறை மன்னிப்பு கேட்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.